புத்தி தெளிந்த புதல்வர்கள்
கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார். (ஆதி 31:3)
வழிகளில் சிக்கிக்கொள்ளாதபடி நம்முடைய விழிகள் விழித்திருக்கவேண்டும். ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும் (ஆதி 30:25) என்று சொன்னான். லாபானுடைய வீட்டிலே யாக்கோபுக்கு உண்டான நெருக்கமும், 'இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம்' (ஆதி 31:30) என்று லாபான் சுட்டிக்காட்டுவதினால், தகப்பனையும் மற்றும் தாயையும் குறித்த எண்ணமும் தன் தேசத்திற்குப் போகும்படி யாக்கோபைத் தள்ளிக்கொண்டிருந்தது. மனிதர்களால் உண்டாகும் அழுத்தத்தையும் (ஆதி. 30:12), மாற்றாக மனதிலே உண்டான விருப்பதையும் (ஆதி. 30:25), 'நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்' (ஆதி 28:15) என்று ஆண்டவர் கொடுத்த வார்த்தையோடும், வாக்குத்தத்தத்தோடும் இணைத்துப் பார்க்கவேண்டிய யாக்கோபு, மீண்டும் லாபானின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, 'வேலைக்காரனாக' வாழும் நிலைக்கே தன்னைத் தள்ளிக்கொண்டான். நான் உனக்கு என்ன தரவேண்டும் என்று லாபான் கேட்டபோது, நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன் (ஆதி 30:31) என்று கூறிவிட்டானே. 'நீர் எனக்குச் செய்தால்' என்று யாக்கோபு சொன்னபோதிலும், லாபான் அல்ல தேவனே யாக்கோபுக்குச் செய்து, அவனை ஆசீர்வதித்தார் என்பதல்லவோ உண்மை.
நம்முடைய வாழ்க்கையிலும், சில நேரங்களில் இப்படிப்பட்ட நிலைக்குள் நாம் நம்மைத் தள்ளிவிடுகின்றோம். தப்பியோடி, தஞ்சம் புகுந்துகொள்வதைப் போல தற்காலிகமான இடத்தில், தேவனுடைய உதவியோடும் ஒத்தாசையோடும் வாழ்நாட்களைக் கடத்தினாலும், அங்கிருந்து புறப்படவேண்டும் என்ற விருப்பமும், அழுத்தமும் உள்ளத்திலும், உள்ளவர்களிடத்திலும் இருந்து உண்டாகும்போது, ஊதியத்தை மனதில் கொண்டவர்களாக, 'நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்' என்று யாக்கோபைப் போல, நாம் விரும்பும் காரியங்களை முன்வைத்து (னநஅயனெ) அழைப்பை, ஊழியத்தை ஆண்டவர் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை மறந்தவர்களாக அல்லது விலக்கிவைத்தவர்களாக தொடர்ந்து அங்கேயே வாழ்ந்துவிட முயற்சிக்கிறோம். இது, தன்னுடைய கம்பெனியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கம்பெனிக்கு வேலைக்குச் செல்லவிருக்கும் ஒருவரை ஊதியத்தால் உட்காரவைப்பது போன்றதே. எனவே மீண்டும், கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார். (ஆதி 31:3)
ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான் இளையகுமாரன். எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். குறைவுபடத்தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான் (லூக் 15:12,16). அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன் என்று சொன்னவனாக, எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனை நோக்கி வந்தான் (லூக். 15:17,20). இளையகுமாரன் ஆஸ்தியோடு புறப்பட்டுச் சென்று காலியான கரங்களோடு வந்தான், யாக்கோபு காலியான கரங்களோடு சென்று ஆஸ்திகளோடு வந்துகொண்டிருந்தான் (ஆதி. 32:10). இளைய குமாரன் வரும்போது மூத்த குமாரன் வருத்தமடைந்தான் (லூக். 15:30). யாக்கோபு புறப்பட்டு வந்துகொண்டிருந்தபோது, ஏசாவை நினைத்து பயந்துகொண்டிருந்தான் (லூக். 32:7). இளையகுமாரனும், யாக்கோபும் வௌ;வேறு சூழ்நிலையில் காணப்பட்டாலும், 'புத்தி தெளிந்த' பின்பே புறப்பட்டார்கள். இளைய குமாரனை தகப்பன் சாந்தப்படுத்தினான்; ஏசாவையோ, கர்த்தரே சமாதானப்படுத்தியிருந்தார். இளையகுமாரனை தகப்பன் முத்தஞ்செய்தான் (லூக் 15:20); யாக்கோபையோ, அவன் பயந்திருந்த ஏசாவே முத்தம் செய்தான் (ஆதி. 33:4). சத்துருவின் பிடியிலிருப்போர் மாத்திரமல்ல, 'ஆவிக்குரியவர்கள்' என்று அழைக்கப்படுபவர்களும் சில நேரங்களில் புத்தி தெளியவேண்டிய அவசியமுண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக