ஆசீர்வாதங்களுக்கும் மேலானவர்
உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை (Nations) உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் (Kings) தோன்றுவார்கள். உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி (GOD) எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். (ஆதி 17:6,7)
ஆசீர்வாதத்தை மாத்திரமல்ல, ஆசீர்வாதத்திற்கடுத்து தொடர்ச்சியாகச் சொல்லப்படும் அவர் ஆணைகளையும் கவனத்தில் கொண்டால் மாத்திரமே ஆசீர்வாதங்களைக் காத்துக்கொள்ளமுடியும். 'சந்ததியைக்' கேட்ட ஆபிரகாமுக்கு, 'ஜாதியை அல்ல ஜாதிகளைக்' கொடுத்தார் ஆண்டவர்; அப்படியே, 'ராஜாவை அல்ல ராஜாக்களைக்' கொடுத்தார் ஆண்டவர். 'நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு' (எபேசி. 3:20) என்றே எழுதுகிறார் பவுல். நாம் வேண்டிக்கொள்ளும்போது, 'பாத்திரத்திற்குத் தேவையானதை மாத்திரமல்ல, பாத்திரம் நிரம்பி வழிந்து, மற்ற பாத்திரங்களுக்கும்
தேவையானதைக்' கொடுப்பவர் அவர். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளம் 'ஜீவத்தண்ணீரால் நிரம்பும்' என்று அல்ல 'உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்' (யோவான் 7:38) என்றே போதித்தார் இயேசு கிறிஸ்து. எனவே தாவீது, 'அவர் உம்மிடத்தில் ஆயுசைக் கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்' (சங். 21:4) என்று பாடுகிறான். ஆண்டவரிடத்திலிருந்து வரும் ஆசீர்வாதங்களை கொள்ளும் அளவிற்கு நம்மிடத்திலே பாத்திரங்கள் இல்லை; வெளியிலிருக்கும் பாத்திரங்களும் நிரம்பும் அளவிற்கு அவைகள் வந்துகொண்டேயிருக்கும். எலிசா, தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுடைய மனைவியை நோக்கி, 'நீ போய் உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டு வாங்கி, உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான், அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப்பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள். அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோயிற்று. (2 இரா 4:4-6)
நாமும் அநேக நேரங்களில் நம்முடைய கடன்கள் தீருவதற்குப் போதுமான ஆசீர்வாதங்களை ஆண்டவரிடத்திலிருந்து பெற்றுவிட்டு, மற்றவர்களுடைய பாத்திரங்களைக் குறித்து கவலைப்படாமல் எண்ணெயை நிறுத்திவிடுகிறோம். இல்லையென்றால், இளையகுமாரன் தந்தையை விட்டுத் தூரமாகச் சென்றதைப்போல, ஆசீர்வாதங்களைப் பெற்றபின் அகன்றுபோய்விடுகிறோம். மற்றவர்களுடைய பாத்திரங்களில் வார்க்கவேண்டிய அநேகர், மற்றவர்களுடைய பாத்திரங்களிலுள்ள தவிட்டைத் திண்ணும் நிலைக்குத் தங்களைத் தள்ளிக்கொண்டதற்குக் காரணம் இதுவே. மற்றவர்களுடைய பாத்திரத்தில் வசனத்தை வார்த்துக்கொண்டேயிருந்தால், எண்ணெய் வானத்திலிருந்து வந்துகொண்டேயிருக்கும்.
ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்கும்போது, சந்ததியினை (னுநஉநனெநவெ) மட்டுமல்ல, ஜாதிகளை (யேவழைளெ) மட்டுமல்ல, ராஜாக்களை (முiபௌ) மட்டுமல்ல ஆசீர்வதிக்கப்படும் எல்லாவற்றின் மேலும் 'தானே தேவனாயிருக்கவேண்டும்' என்றே விரும்புகின்றார். இல்லையென்றால், நாம் ஆசீர்வாதங்களை இழந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடும். ஆசீர்வாதங்களைக் காக்கிறவர் அவரல்லவோ! எனவே, 'கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்' (எண்; 6:24) என்று இஸ்ரவேல் ஜனங்களின் மீது ஆரோனைக் கொண்டு கூறினார். ஆசீர்வாதங்களுக்கும் மேலானவரை இழந்தால், ஆசீர்வாதங்களையும் இழந்துவிடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக