ஆகாரைத் தொடரும் ஆண்டவர்
கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு: சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார். அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள். (ஆதி 16:7,8)
ஆகார், சாராயின் அடிமைப்பெண்; தன் நாச்சியாராகிய சாராய்க்குத் தெரியாமல் ஆபிராமினிடத்தில் அவள் பிரவேசித்துவிடவில்லை; மாறாக, சாராயினாலேயே ஆபிராமோடு சேர்த்துவைக்கப்பட்டவள். ஆகாரின் குறைவை அல்ல, தனது குறைவை நீக்கிக்கொள்ளவே சாராய் ஆகாரைப் பயன்படுத்தினாள்;. குறைவினைத் தீர்த்துக்கொள்ள குடும்ப வாழ்க்கையையே பறிகொடுக்கத் துணிந்தாள் சாராய். என்றாலும், பயன்படுத்தும்படியாக கையிலெடுத்த பாத்திரத்தை பாதியிலேயே போட்டு உடைத்துவிடும்படியாக உணர்ச்சிவசப்பட்டபோது, உடைக்கபட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட பாத்திரத்திற்கு உதவி செய்தார் ஆண்டவர். சில நேரங்களில் நாமும் இப்படிப்பட்ட குணத்திற்கு இடங்கொடுத்துவிடுகிறோம்; உபயோகப்படுத்தவேண்டும் என்று விரும்பியவர்களை உடைத்துவிடுகிறோம். சாராயின் கடினமான நடத்துதலால், அடிமையாகக்கூட இருக்கமுடியாமல் அங்கிருந்து ஓடிவிடுவதே நல்லது என்ற நிலைக்கு ஆகார் தள்ளப்பட்டாள்.
நம்முடைய கடினமான நடக்கையினால் பாதிக்கப்படும் ஜனங்கள் உண்டோ? நம்முடைய கடினமான நடக்கையினால், வார்த்தைகளினால், செயல்பாடுகளினால், குடும்பத்தை விட்டு, ஊழியத்தை விட்டு, வேலையை விட்டு ஓடிவிடும் மக்கள் உண்டோ? நம்முடைய குறைவுகளை நிவிர்த்தி செய்ய சிலரைப் பயன்படுத்திவிட்டு, உரிமைகள் பறிபோய்விடுமோ என்ற பயத்தின் ஆட்கொள்ளுதலினால் அவர்களை இருப்பிடத்தை விட்டு அகற்றிவிட நினைக்கின்றோமா? அப்படிப்பட்ட ஜனங்களோடு கர்த்தர் சேர்ந்துகொள்ளுகிறார் என்பது நாம் கற்றுக்கொள்ளவேண்டியதோர் பாடம்.
கர்ப்பினியாக, ஆபிராமின் வீட்டைவிட்டு வனாந்தரத்தின் வழியாக ஆகார் போய்க்கொண்டிருந்தபோது, பாதையில் காணப்பட்ட ஓர் நீரூற்று அவளது பயணத்தை நிறுத்தியது. ஆகாரைப் போல ஓடிக்கொண்டிருப்போருக்கு இன்றும் வனாந்தரத்தில் நீரூற்று உண்டு. கண்டு நின்றால், கர்த்தரின் சத்தத்தை நாம் கேட்கமுடியும்.
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார் (ஆதி 16:9). ஒருவேளை, 'அடங்கியிருக்கும்படியாக' ஆகாருக்கு கிடைத்த கட்டளையாக இது தோன்றுகின்றபோதிலும், 'அடங்கியிருக்கும் நாள் வரையிலும்' சாராயின் குணத்தில் ஏதாவது மாறுதல் உண்டாகிறதா என்பதைச் சோதிக்கும்படியாக தேவனால் அனுமதிக்கப்பட்டதாகவுமிருக்கக்கூடும். என்றபோதிலும், சாராயின் குணத்தில் மாற்றம் உண்டாகவில்லை. தனக்கு ஒரு குமாரன் பிறந்தபோதோ, 'இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை' என்றே கூறுகிறாள் சாராய் (ஆதி 21:10). இப்பொழுதோ, ஆகாரை மட்டுமல்ல, ஆகாரின் மகனாகிய இஸ்மவேலையும் வெறுக்கும் நிலையிலேயே சாராய் காணப்பட்டாள். குழந்தையைப் பெற்றெடுத்த பின்னரும்கூட, ஆகாரின் மீது சாராய்க்கு இரக்கம் உண்டாகவில்லை. அந்தக் குழந்தையை தன்னுடைய குழந்தையாகப் பார்க்கும் மனப்பாங்கும் இல்லை. சாராயின் இந்த குணத்தை அறிந்தே, 'அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்' (ஆதி 21:12) என்கிறார் ஆண்டவர்.
நம்முடைய வாழ்க்கையிலும், 'நம்முடைய குணத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கும்படியாக' சில நபர்களை தேவன் திரும்பவும் நம்மோடு கூட இணைத்திருக்கக்கூடும்; நாம் அவர்களை எப்படி நடத்துகின்றோம் என்பதை, தேவன் எப்பொழுதும் உற்றுக் கவனித்துக்கொண்டேயிருக்கின்றார். நம்முடைய குணம் என்ன? மனம் மாறுதலை ஆண்டவர் நம்மிடத்திலேயே எதிர்பார்க்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக