பெத்தேல், ஏல்பெத்தேல்
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான். (ஆதி 35:7)
தற்காப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் மாத்திரமே தேவனைப் பயன்படுத்திவிட்டு, தூரமாகப் பயணித்துவிடும் மனிதர்கள் அநேகர். ஆபத்து நேரிடும்போது, அவரது செட்டைகளின் நிழலைத் தேடுவதும், ஆபத்து நீங்கியதும் செட்டைகளை விட்டு சிதறிஓடிவிடுவதும், வாழ்க்கையில் வருத்தங்கள் வரும்போது தேவனுடைய வீட்டைத் தேடிவருவருவதும், வருத்தங்கள் நீங்கியதும் விலகிச் சென்றுவிடுவதுமே இவர்களது வழக்கமாயிருக்கும். ஆண்டவரை ஆராதிக்கும்படியாகக் கட்டப்பட்ட ஆலயங்களைக் கூட அடைக்கலப்பட்டணங்களாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் குணமே இவர்களில் குடிகொண்டிருக்கும். உலக வாழ்க்கைக்காகவே உன்னதத்தை தினம் தினம் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் மனம் கொண்டவர்கள் இவர்கள். மேலும், தங்களருகிலே, தங்களுக்குள்ளே தங்களை எரியச் செய்யும் எண்ணெயாக அல்ல; தங்களுக்கு வெளியே, தங்களைப் பாதுகாக்கும்படியாகவே ஆண்டவரை நிறுத்தியிருப்பார்கள். பாதுகாப்பு மாத்திரமல்ல, பரிசுத்தமே வாழ்க்கையில் பிரதானமானது. எனவே, யாக்கோபின் வாழ்க்கையில் காணப்பட்ட 'பெத்தேல்' அனுபவமும் 'ஏல்பெத்தேல்' அனுபவமும் நம்முடைய வாழ்க்கையிலும் காணப்படவேண்டியது அவசியம்.
இயேசு கிறிஸ்து போதித்த 'ஓர் ஒரு தகப்பன் மற்றும் இரண்டு குமாரர்கள்' என்னும் உவமையை, யாக்கோபின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மையான நிகழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பல சத்தியங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். தகப்பனிடத்திலிருந்து தனக்குரிய பங்கை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றான் இளையகுமாரன் (லூக். 15:12); ஆனால், யாக்கோபோ, தகப்பனிடத்திலிருந்து அண்ணனுடைய ஆசீர்வாதத்தை வார்த்தைகளால் ஏமாற்றிப் பெற்றுக்கொண்டு, வெறுங்கையனாகவே வீட்டைவிட்டு வெளியேறினான் (ஆதி. 27:19; தப்பிச் செல்லும் அவசரத்தில், தன்னுடைய பங்கைக்கூட தகப்பனுடைய வீட்டிலேயே விட்டுச்செல்லும் நிலைதான் யாக்கோபுக்கு உண்டானது. தனக்குரிய பங்கைப் பெற்றுக்கொண்டு வெளியேறிச் சென்ற இளையகுமாரன், திரும்பி வரும்போதா வெறுங்கையாகவே வந்தான் (லூக். 15:16,22). ஆனால், வெறுங்கையனாக வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்ற யாக்கோபு இரண்டு பரிவாரங்களோடு திரும்பி வந்துகொண்டிருந்தான் (ஆதி. 32:10). இளைய குமாரன் தவறான பாதையில் பயணித்து, துன்மார்க்கமான மார்க்கத்தில் சஞ்சரித்து, துன்மார்க்கமான நண்பர்களோடு தான் பெற்ற ஆஸ்திகளை அழித்துப்போட்டான் (லூக். 15:13); ஆனால், யாக்கோபோ துன்மார்க்கத்திற்குத் தன்னை விற்றுப்போடாமல், தேவனுக்கும் தனக்கும் இடையிலான தொடர்பிலிருந்து தன்னைத் துண்டித்துவிடாமல், தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தான். எனவே, லாபானால் யாக்கோபை வெறுமைப்படுத்த இயலவில்லை (ஆதி. 31:42).
நம்முடைய வாழ்க்கையிலும், வெறுங்கையர்களாக நாம் இருப்போமென்றாலும், தேவன் நம்மோடு கூட இருப்பாரென்றால் நாம் ஐசுவரியவான்களே, பரலோகம் நம்மைப் பார்த்துக்கொண்டேயிருக்கும், பிதா நமது தேவைகளைச் சந்தித்துக்கொண்டேயிருப்பார்; அன்றன்றுள்ள அப்பம் நமக்குக் குறைவின்றி அவரிடத்திலிருந்து கிடைத்துக்கொண்டேயிருக்கும். மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் (சங் 118:8) என்ற வசனத்தின் விளக்கம் வாழ்க்கையின் விளக்காய் எரியும். உலகப்பிரகாரமான தகப்பனிடத்திலிருந்து யாக்கோபு பிரிந்துசென்றாலும், பரலோகப் பிதாவினிடத்திலிருந்து அவனது வாழ்க்கை பிரிந்திருக்கவில்லை. தகப்பனுடைய வீட்டிலிருந்து யாக்கோபு விலகிச் சென்றிருந்தபோதிலும், 'தேவனுடைய வீடு' அவன் கூடவே சென்றுகொண்டிருந்தது.
தகப்பனோடுகூட இளையகுமாரன் வீட்டில் இருந்தபோது, இளையகுமாரனுக்கும் அண்ணனுக்கும் அதிலே பங்கு இருந்தாலும், தகப்பனும் உடனிருந்ததினால், அந்த வீடு தகப்பனுடையதாகவே கருதப்பட்டது. இதுவே 'பெத்தேல்' அனுபவம்; ஆனால், இளையகுமாரன் திரும்பிவரும்போதோ, அதாவது தன்னுடைய ஆஸ்திகள் அனைத்தையும் அழித்துpவிட்டு, தகப்பனுடைய வீட்டில் தனக்குரியவைகள் எதுவும் இல்லாத நிலையில் வந்தபோதோ, இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று (லூக் 15:19) சொல்லும் எண்ணத்துடனேயே வந்துகொண்டிருக்கின்றான். இளையகுமாரனுக்கென்று, தகப்பனுடைய வீட்டில் பங்கு எதுவும் இல்லை; எல்லாவற்றையும் ஏற்கனவே வாங்கிக்கொண்டான். எனவே, மீதமிருப்பது 'தகப்பனுடையது மாத்திரமே' என்ற எண்ணத்துடனேயே இளையகுமாரன் வருகிறான். இதுவே 'ஏல்பெத்தேல்' அனுபவம்.
ஆனால், யாக்கோபினுடைய வாழ்க்கையோ வித்தியாசமானது. தகப்பனுடைய வீட்டை விட்டு வெளியேறி, மாமனாகிய லாபானுயை வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றபோது, வெறுங்கையனாகவே சென்றான்; அவனிடத்தில் எதுவுமில்லை; அப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே தேவன் யாக்கோபைச் சந்தித்தார்; 'யாக்கோபினிடத்தில் ஒன்றுமில்லை; தேவனே எல்லாம்' என்பதை வெளிக்காட்டும்படியான, உணர்த்துவிக்கும்படியான சந்திப்பு அது. பயப்படாதே, உன்னுடைய கைகளில் ஒன்றுமில்லாவிட்டாலும், உன்னை ஆசீர்வதிக்கும்படியாக நான் உடனிருக்கிறேன் என்பதைக் கூறும் சந்திப்பு அது; இது யாக்கோபின் வாழ்க்கையின் 'பெத்தேல்' அனுபவம். நம்முடைய வாழ்க்கையிலும், 'பெற்றுக்கொண்டால் மாத்திரமே' அது பெத்தேல் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஜனங்கள் உண்டு. எனினும், ஒன்றுமில்லாத நேரத்திலும் அவர் உடனிருப்பதே 'பெத்தேல்' என்ற அனுவமே மேலானது.
ஆனால்;, மூத்த குமாரனுடைய மனநிலையோ மாறாக இருந்தது. இளையகுமாரன் தன்னுடைய பங்கை வாங்கி செலவழித்துவிட்டான்; எனவே எஞ்சியிருப்பது 'என்னுடைய பங்கு' மாத்திரமே என்றே நினைத்துக்கொண்டிருந்தான் மூத்த குமாரன். என்றாலும், தகப்பனோ அதனை மூத்த குமாரனுடைய பங்காகக் கருதவில்லை; மாறாக, தன்னுடைய ஆஸ்தியாகவே கருதுகின்றார். எனவே, மூத்த குமாரனை நோக்கி: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது (லூக் 15:31) என்று சொல்லுகின்றார். நாம் தகப்பனோடுகூட இருப்போமென்றால், நமக்குரியவைகளாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் அவருக்குரியவைகளாகவே கணக்கில் கொள்ளப்படும். என்னுடையது என்று எதுவுமில்லை; எல்லாம் உம்முடையது என்பதே 'ஏல்பெத்தேல்' அனுபவம்.
ஆனால், மூத்த குமாரனோ, 'தனக்குரியவைகள் தான், தகப்பனிடத்திலிருக்கிறது' என்று தவறாக நினைத்துக்கொண்டிருந்தான். இளையகுமாரன் ஆஸ்தியைப் பங்கிட்டுப் பெற்றுச்சென்றபோது, எஞ்சியிருக்கும் அத்தனையும் தன்னுடையதுதான் என்று மூத்தகுமாரன் எண்ணிவிட்டான். அதுவே அவனது மனவருத்தத்திற்குக் காரமாயிருந்தது. 'அனைத்தும் கிறிஸ்துவுக்கே' என்று பாடினாலும், இன்றும், இப்படிப்பட்ட எண்ணம் நம்மிடத்திலிருக்குமென்றால், நம்முடையதிலிருந்து ஆண்டவரே எடுத்துக்கொடுக்கும்போது, நாம் வருத்தத்துடன் வீட்டிற்கு வெளியேதான் நின்றுகொண்டிருப்போம். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை (யாக் 1:17); அவரிடத்திலிருந்தே நமக்கு வருகிறது என்பதை புரிந்துகொள்ளுவோமென்றால், மூத்த குமாரனாயிருந்தாலும் நம்முடைய புத்தி தெளிந்துவிடும். அதிக தாலந்தைக் கொடுப்பதும் (மத். 25:15),மமான சம்பளத்தைக் கொடுப்பதும் அவரது உரிமையே; ஏனெனில், அனைத்தும் அவருடையதே.
கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் (ஆதி 31:3) என்றே கூறினார்; என்றபோதிலும், அதனைத் தொடர்ந்து, தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு (ஆதி 35:1) என்று கூறுகின்றார். 'உன் பிதாக்களுடைய தேச்திற்கும், உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ' என்று சொன்னவர், 'நீ பெத்தேலுக்குப் போ' என்று கூறுவதின் நோக்கம் என்ன? ஒருமுறை பெத்தேலிலே காப்பாற்றப்பட்டிருந்தாலும், திரும்பி வந்துகொண்டிருக்கும்போதோ, தேவனுக்குப் பிரியமில்லாதவைகள் யாக்கோபின் பரிவாரத்திற்குள் காணப்பட்டனவே. அதை சுத்திகரித்துவிட்டுச் செல்லவே 'பெத்தேலுக்கு' போகச்சொன்னார் தேவன். போகும்போது மாத்திரமல்ல, திரும்பி வரும்போதும் 'பெத்தேலுக்கு' போய்விட்டு வீட்டிற்குப் போனால், தேவையற்றவைகள் நமது வீட்டிற்குள் நுழையாது. தப்பி ஓடினபோது 'பெத்தேல்' (வுhந ர்ழரளந ழக புழன) என்று பெயரிட்ட யாக்கோபு; திரும்பி வரும்போதோ 'ஏல்பெத்தேல்' (வுhந புழன ழக வாந ர்ழரளந ழக புழன) என்று பெயரிடுகின்றான். தேவன் தன்னை சந்தித்ததை நினைவுகூர்ந்து, தன்னைச் சுத்திகரித்துக்கொள்வதே 'ஏல்பெத்தேல்'