வேலிகள் விலகினால்...
அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். (ஆதி 19:26)
இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். (ஆதி 19:36)
உடனிருப்பவர்களைப் பிரித்து, வாசலைத் திறப்பாக்கி, வழியை உருவாக்கி, வாழ்க்கையின் உள்ளே ஊடுருவி, உருவாக்கினவைகளை உருக்குலைத்துவிடுவது சத்துருவின் தந்திரம். 'திரும்பிப் பாராதே' என்ற கட்டளையை மீறி கண்களால் திரும்பிப் பார்த்ததால், உப்புத் தூணாக மாறிப்போனாள் லோத்துவின் மனைவி. மனைவியை அங்கேயே விட்டுவிட்டு, மறுபடியும் ஓட்டத்தைத் லோத்து தொடர்ந்தபோதிலும், மனைவியைப் பிரிந்த லோத்துவை, குமாரத்திகள் இருவரையும் கொண்டு நேர்முகமாகவே வீழ்த்திவிட்டான் சத்துரு. இன்றும், 'பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருக்கும் மனிதர்களை ஏதோ ஒரு விஷயத்தில் பின்னிட்டுத் திரும்பிப்பார்க்கச் செய்து, பிரித்துவிட்டு, தன் கைவசத்திலிருக்கும் மனிதர்களைக் கொண்டு நீதிமான்களை வீழ்த்திவிட சத்துரு முயற்சிக்கிறான்.'
யோபுவைக் குறித்து, 'நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று' (யோபு 1:10) என்று சாத்தான் சொல்லுகின்றானே. யோபுவைச் சுற்றிலும் அடைக்கப்பட்ட வேலி என்பது 'யோபுவின் மனைவியையும் இணைத்தே குறிக்கின்றது அல்லவோ.' 'இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனைமாத்திரம் தப்பவிடு' (யோபு 2:6) என்று ஆண்டவர் சொன்னபோது, 'யோபுவின் பிராணன் மாத்திரமல்ல, மனைவியின் பிராணனும் தப்புவிக்கப்பட்டதல்லவோ.' யோபுவின் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷpத்து ஜீவனை விடும் (யோபு 2:9) என்று சொல்வது, தன்னுடைய ஜீவன் யோபுவின் ஜீவனோடு இணைந்திருக்கிறது என்பதையும், அவர்கள் ஒரே சரீரமாயிரு;ககிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ளாததினாலேயே. 'ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது' என்று (கொலோ 3:3), மணவாட்டிகளின் ஜீவன் மணவாளனுக்குள் மறைந்திருக்கிறது என்று பவுல் கொலோசெயருக்கு எழுதுகின்றாரே. பிராணனைக் காக்கும் வேலியை பிடுங்குவதற்கு கர்த்தர் அனுமதியளிக்கிறதில்லை.
மேலும், 'என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்' (உன் 4:12) என்று சாலமோன் எழுதுவதன் அர்த்தம், 'மணவாளியின் வேலி மணவாளன்' என்பதுதானே. கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் வேலியாகவே வாழ்க்கையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டவர்கள் எத்தனைபேர். உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை (மத் 19:8) என்றார் இயேசு கிறிஸ்து. வேலியாக வைக்கப்பட்ட மனிதர்களை நாம் பிடுங்கினால், 'அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.' (பிர 10:8) என்ற வசனத்தின் தண்டனையினை வாழ்க்கையில் அனுபவிக்கவேண்டியதாகிவிடும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் வேலியாயிருக்க, ஆண்டவரும் இவ்விருவரால் கட்டப்படும் குடும்பம் என்னும் திராட்சத்தோட்டத்திற்கு வேலியாயிருக்கிறார். 'முப்புரி நூலாகிய' ஆண்டவருடனான முதல் வேலியை பிடுங்கிஎறிந்ததினாலேயே, அநேகருடைய வாழ்க்கையில், கணவன் - மனைவி என்னும் இரண்டாவது வேலியும் பிடுங்கப்பட்டுப்போயிற்று.'
இத்தனை பாதுகாப்புகளை ஆண்டவர் குடும்பத்திற்குத் தந்திருக்கின்றபோதிலும், அந்த வேலிக்குள்ளே நுழைந்து கசப்பான பழங்களை விளையச் செய்யவேண்டுமென்று சத்துரு சுற்றித் திரிகின்றான். இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது (ஏசா 5:1,2) என்கிறார் ஆண்டவர். கணவன் மனைவியையும் மற்றும் மனைவி கணவனையும், கணவன் மற்றும் மனைவி இவ்விருவரும் ஆண்டவரையும் குடும்பத்தின் பாதுகாப்பின் வேலியாக உணராவிட்டால், வாழ்க்கை பரிதாபமானதாகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக