வேலி
அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான். (ஆதி 34:2)
தன்னைத்தானே கட்டுப்படுத்த இயலாத மனிதன், தான் கெட்டுப்போவ தோடு மற்றவர்களுடைய வாழ்க்கையையும் கெடுத்துப்போடுவது நிச்சயம். சீகேமின் வாழ்க்கை இதற்கு ஓர் உதாரணம். யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாளைக் கண்டதும், அவளது அழகில் மயங்கி, தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ள இயலாத சீகேம், அவளை தனது வசிப்பிடத்திற்கும் அழைத்துச் சென்று, அவளோடு சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தி, அவளை தன்னோடு கூடவே வைத்துக்கொண்டு, அவளது வாழ்க்கையையே கெடுத்துப்போட்டான். மேலும், தீட்டுப்படுத்தினதற்குப் பின்னரே, வீட்டிற்குத் தன் தகப்பனிடத்திற்குத் தீனாள் தனக்கு வேண்டும் என்று சொல்லியனுப்புகின்றான் சீகேம் (ஆதி. 34:4). அதுவும், தானாகச் சென்று சொல்லவில்லை; தகப்பனாயிருந்தபோதிலும் தனது நண்பர்கள் மூலமாகவே தகவல் அனுப்பினான் சீகேம் என்பதே வரலாறு. இன்றைக்கும் அநேக வாலிபர்களுடைய நிலமை இதுவே; கறையான கண்களோடு பெண்களைக் காண்பது மாத்திரமல்ல, பெண்ணுடைய சரீரத்தையும், தன்னுடைய சரீரத்தையும் தீட்டுப்படுத்தி, தொட்டதற்குப் பின்னும், கெட்டதற்குப் பின்னுமே, தாய் தகப்பனிடத்தில் கேட்டனுப்புவது பல வாலிபர்களுடைய வாழ்க்கையில் வழக்கமாகிவிட்டது. தீனாள், தன் தகப்பனுடைய வேலிக்குள் இருந்தும், அவளை அசுத்தப்படுத்தினவன் சீகேம். அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும் (பிர 10:8) என்ற நிலை சீகேமின் வாழ்க்கையில் உண்டாகிவிட்டதே. (ஆதி. 34:25)
தன்னைத் தானே கட்டுப்படுத்த இயலாத, பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபாரின் மனைவி, நித்தம் நித்தம் யோசேப்போடே பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லையே (ஆதி 39:10). கணவனின் வேலிக்குள்ளேயே அவளுடைய வாழ்க்கை இருக்கிறது என்பதை அறிந்த யோசேப்பு, தன்னைக் கட்டுப்படுத்தினவனாக, அவளும் கெட்டுப்போய்விடாதபடி காத்துக்கொண்டானே.
ஆனால், தாவீதோ, ஒருநாள் சாயங்காலத்தில் தன் படுக் கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரி கையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியா யிருந்தாள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான் (2சாமு 11:2,4). பத்சேபாளின் அழகைக் கண்டதும், தாவீது தன்னைத்தான் கட்டுப்படுத்த இயலவில்லை. உரியா என்னும் கணவனுடைய வேலிக்குள் பத்சேபாளின் வாழ்க்கை இருக்கிறது என்பதை அறிந்திருந்தும், தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல், வேலியையே தாண்டிச் சென்றுவிட்டான்.
ஆனால், ஆபிரகாமின் ஊழியக்காரன், ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றபோது, நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் (ஆதி 24:14) என்று கர்த்தரிடத்தில் தான் வேண்டிக்கொண்டபடியே நடந்தபோதிலும், பெண் வீட்டிற்குச் சென்றபோது, இப்பொழுது நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றானே (ஆதி 24:49).
தான் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடைபெற்றுவிட்டபோதிலும், திருமணமாகாத பெண்ணின் வாழ்க்கை பெற்றோரின் வேலிக்குள்ளேயே இருக்கிறது என்பதை அறிந்திருந்தவன் அவன். ஆனால், இன்றோ, இவள்தான் உன் மனைவி என்று கர்த்தர் சொப்பனத்தில் சொன்னார் என்றும், தரிசனத்தில் காட்டினார் என்றும் பெற்றோரை விட்டுப் பிரித்து, தனியே தன்னோடு வாழும்படியாகத் தள்ளிக்கொண்டுபோய்விடும் வாலிபர்கள் எத்தனை? எத்தனை?? பெற்றோரின் அனுமதி கிடைக்காவிட்டால், வலதுபுறமாகிலும், இடதுபுறமாகிலும் புறப்பட்டுப்போக ஆயத்தமாயிராதவர்கள்? எங்கோ அகப்பட்டுக்கொண்டார்கள் என்பது நிச்சயம். அவர்கள் சர்ப்பத்தின் சதி;க்கு இரையானவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக