துர்ச்செய்தியும், நற்செய்தியும்
இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்துக்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான். இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான். அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான். (ஆதி 35:21,22)
ஆல்போல் வளர்ந்தாலும், ஆணிவேரை மாத்திரம் தன் கைகளில் வைத்துக்கொள்ள விரும்புபவன் சத்துரு. யூதேயாவின் கடையாந்தர தென்கோடியில், ஏதோமின் எல்லையில் உள்ள ஓர் பட்டணம் ஏதேர் (யோசுவா 15:21). 'மந்தையின் துருக்கம்' (மீகா 4:8) என்றும் ஆங்கிலத்தில் 'வழறநச ழக வாந கடழஉம' என்று அழைக்கப்பட்டது. மந்தையை மேய்ச்சலுக்காக விட்டுவிட்டு, மேடான, கோபுரம் போன்ற ஓர் பகுதியிலிருந்து ஆடுகளைக் கண்காணித்துக்கொண்டிருப்பது மேய்ப்பர்களின் அக்காலத்து வழக்கமாயிருந்தது. லாபானுடைய வீட்டிலிருந்து தகப்பனாகிய ஈசாக்கின் வீட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலும், மேய்ச்சல் நிறைந்த அந்த இடத்திற்கு அருகில் வந்தபோது, தன்னுடைய மந்தையை மேய்ச்சலுக்காக விட்டுவிட்டு சற்று தங்கி தாபரித்திருக்கக்கூடும். எனினும், ஏதேர் என்கிற கோபுரத்துக்கு அப்புறத்தில் கூடாரம் அமைத்து தங்கிக் குடியிருக்கும்போது, லேயாளுக்குப் பிறந்த இஸ்ரவேலின் மூத்தகுமாரனான ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான். அந்த துர்ச்செய்தி தகப்பனான இஸ்ரவேலின் காதுகளை வந்து எட்டியது (ஆதி 35:22). சேஷ;டபுத்திர சுதந்திரத்திற்குப் பாத்திரவானாக ரூபன் பிறந்திருந்தபோதிலும், இந்த செயல் அவனுடைய வாழ்க்கையை நஷ;டப்படுத்திவிட்டதே.
சகோதரர்கள் யோசேப்பை வெறுத்து, நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றில் அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டபோது, ரூபன் அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய், அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தவன் (ஆதி 37:20-22). பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குப் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்று அங்கலாய்த்தவன் (ஆதி 37:29,30). சகோதரர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று சொன்னவன் (ஆதி 42:22). பஞ்சத்தின் நாட்களில், எகிப்திற்கு தானியம் கொள்ளச் சென்றபோது, ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டு வருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று உறுதியளித்தவன் (ஆதி 42:37). என்றபோதிலும், மறுமனையாட்டியுடன் ரூபன் சயனித்ததை மனதிலேயே வைத்திருந்த தகப்பன், 'ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே' (ஆதி 49:3,4) என்று சபித்துவிட்டானே. எத்தனை நல்ல குணங்களும்;, வல்லமையும் காணப்பட்டபோதிலும், 'பாலுறவில் இருந்த பலவீனம்' அவனை படுகுழிக்குள் தள்ளிவிட்டதே.
என்றபோதிலும், துர்ச்செய்தி இஸ்ரவேலின் காதுகளை வந்தெட்டிய 'மந்தையின் துருக்கம்' என்றுமிடத்திலேயே பிரதான மேய்ப்பரான இயேசு கிறிஸ்து பிறந்த நற்செய்தி மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது (லூக். 2:10). உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தபோது, யோசேப்பு தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனபோது (லூக். 2:1,4,5). அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் (லூக் 2:8) என்ற இடம் இதுவே என்று வேதபண்டிதர்களால் கணிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக