வெள்ளி, 8 அக்டோபர், 2021

ஆசீர்வாதமும், ஐசுவரியமும் (ஆதி 14:18-20)

 

ஆசீர்வாதமும், ஐசுவரியமும்


அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். (ஆதி 14:18-20)

சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான். (ஆதி 14:21) 

நம்முடைய ஆசை ஆசீர்வாதத்தைச் சார்ந்திருக்கிறதா? அல்லது ஐசுவரியத்தைச் சார்ந்திருக்கிறதா? ஆசீர்வாதம் என்பது என்ன? என்பதை அறியாது அநேகரது கண்கள் அடைக்கப்பட்டிருக்கின்றதுளூ அத்துடன், 'ஐசுவரியத்தையே, ஆசீர்வாதம்' என்றும் அளவிட்டுக்கொண்டிருக்கின்றது. சோதோம் மற்றும் கொமோரா பட்டணங்களைக் கொள்ளையிட்டுச் சென்ற சத்துருக்களை ஆபிராமின் கைகளில் ஆண்டவர் ஒப்புக்கொடுத்தபோது, அவர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்த சகல பொருட்களையும் ஆபிராம் திருப்பிக்கொண்டுவந்தான்ளூ தன் சகோதரனாகிய லோத்தையும் அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான் (ஆதி. 14:16).

ஆபிரகாம் போரிட்டபோது, பொருட்களைப் போட்டுவிட்டு வந்துவிடவில்லைளூ ஜனங்களுக்குரியதை கூடவே எடுத்துக்கொண்டுதான் வந்தான். வெற்றியுடன் ஆபிராம் திரும்பிவந்தபோது, உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் 

உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

மெல்கிசேதேக்கு கொண்டுவந்த 'அப்பமும், திராட்சரசமும்' அபிராமின் சந்ததியிலிருந்து வரப்போகும் மேசியாவான இயேசு கிறிஸ்துவுக்கு முன்னடையாளமானதே. அது, ஆபிராமின் அப்போதைய வெற்றியைத் தேற்றிக்கொள்ளும் ஆகாரமாக மாத்திரமல்ல, ஆபிராமின் சந்ததியில் உதிக்கவிருக்கும் இயேசு கிறிஸ்து பிசாசின் மீது கொள்ளவிருக்கும் வெற்றியின் அடையாளமாகவே ஆபிரகாமின் கைகளில் கொடுக்கப்பட்டது. 

ஆனால், சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கும் என்னும் சாவே பள்ளத்தாக்கு மட்டும், ஆபிராமுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான் (ஆதி 14:21).

ஆவிக்குரியவர்களுக்கும், மாம்சத்துக்குரியவர்களுக்கும் ஆத்துமாவுக்கும் சரீரத்துக்கும் உள்ள வித்தியாசம் இதிலே விளங்கும். மெல்கிசேதேக்கு ஆபிராமை ஆசீர்வதித்தான்ளூ மெல்கிசேதேக்கின் வார்த்தைகள், ஆண்டவரை 'வானத்தையும் பூமியையும் உடையவராகக்' காட்டுகின்றதே. ஆனால், சோதோமின் ராஜாவோ, ஆபிராமை ஐசுவரியவானாக்க நினைத்தான். 

இன்றும், ஜனங்களைக் கொடுத்துவிட்டு, பொருட்களை எடுத்துச்செல்லும் ஐசுவரியவான்களாகவே ஊழியர்களை மாற்ற சத்துரு முயற்சிக்கிறான். நம்முடைய தெரிந்துகொள்ளுதல், நம்மை மாம்சத்துக்குரியவர்களா? அல்லது ஆவிக்குரியவர்களா? என்பதை அடையாளப்படுத்தப் போதுமானது. பொருட்களை கொடுத்துவிடுவதற்கு சாத்தான் எப்போதும் ஆயத்தமாயிருக்கிறான்ளூ ஆனால், ஜனங்களையோ கொடுத்துவிட அவன் விரும்புவதில்லை. ஆத்துமாக்களை விட்டுவிட்டு, ஐசுவரியத்தை மட்டும் வீட்டிலே நாம் சேர்த்துக்கொண்டிருந்தால், நம்முடைய பொக்கிஷம் பரலோகத்தில் அல்ல பிசாசினிடத்திலேதான் சேர்ந்துகொண்டிருக்கும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக