சனி, 9 அக்டோபர், 2021

எகிப்து எதற்கு? (ஆதி 50:20)

 

 எகிப்து எதற்கு?


நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். (ஆதி 50:20)


பஞ்சத்திலிருந்து தன்னுடைய ஜனங்களைக் பாதுகாக்கும்படியாக, எதிரியின் பாளையத்திற்குள்ளும் தேவன் நம்மை நுழையச் செய்யக்கூடும். தன்னுடைய பார்வையில் வீரர்கள் என்று என்று நினைப்பவர்களை இத்தகைய விளையாட்டில் தேவன் உபயோகித்து வெற்றியும் பெறுவதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இத்தகைய திட்டத்திற்குள் நம்மைத் தள்ளிவிட, சகோதரர்கள் என்று நாம் நினைப்பவர்களைக்கூட தேவன் அனுமதிக்கக்கூடும்; என்றபோதிலும், நம்மைத் தள்ளிவிடுபவர்களையும், அங்கே நாம் தங்கியிருக்கும் நாட்களையும் தவறுதலாகப் புரிந்துகொண்டு, ஆண்டவருடைய அனுமதியின்றி ரகசியமாக நம்முடைய முயற்சிகளினால் அங்கிருந்து வெளியேற முயற்சித்தால், நம்மைக் கொண்டு நிறைவேற்றப்படவிருக்கும் கர்த்தருடைய திட்டத்தை நாம் தகர்த்துவிடக்கூடும்; அதுமாத்திரமல்ல, எதிரியின் தேசத்திற்குள் தைரியமாக வந்து தானியங்களை வாங்கிச் செல்லும்போது, கைதிகளாக யாக்கோபின் குமாரர்கள் பிடிக்கப்படும் சூழ்நிலையையும் ஒருவேளை நாம் உருவாக்கிவிடக்கூடும். அதன் மாதிரி, யோசேப்பு தன் சகோதரர்களோடு இடைபடுவதின் மூலம் காட்டப்படுகின்றதே. ஒருவேளை யோசேப்பு அந்த இடத்தில் இல்லாதிருந்து,  இத்தகைய சூழ்நிலை அவர்களுக்கு அங்கே உண்டாயிருந்தால் என்னவாகியிருக்கும்? 

எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று தெரிந்தபோதிலும், யாக்கோபின் குமாரர்கள் உடனடியாக எகிப்திற்குச் சென்றுவிடவில்லையே; எகிப்து தேசத்திற்கு எப்படி செல்வது என்றே மனதில் சிந்தித்துக்கொண்டுதானிருந்தார்கள். 'நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?' (ஆதி 42:1) என்று யாக்கோபு தன் குமாரர்களைப் பார்த்து கூறுவதை வேத்தில் வாசிக்கின்றோமே. மேலும், எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய், நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்று சொன்ன பின்புதான் யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப் போனார்கள் (ஆதி 42:2,3) என்பதையும் நாம் வசனத்தில் வாயிலாக அறிகிறோமே. சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம்கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள் (ஆதி 41:57) என்றே வேதமும் எகிப்தின் நிலையினை எடுத்துக்கூறுகின்றது. 

பஞ்ச காலத்தில் எல்லா தேசங்களையும் போஷிக்கும்படியாக தேவன் எகிப்தை தெரிந்துகொண்டதும், அந்த பஞ்ச காலத்தைக் கையாளுவதற்காக தன்னுடைய பிள்ளையாகிய யோசேப்பை எகிப்திலே உயர்த்தி வைத்ததும் அவரது ஆசனத்தின் எத்தனை அற்புதமான யோசனை. தன்னுடைய பிள்ளைகள் இருக்கும் தேசத்தை விட்டுவிட்டு, எகிப்திலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொடுக்கவேண்டும் என்பதே தேவனுடைய திட்டம். அப்படியென்றால், எகிப்திற்குள் தன்னுடைய ஜனங்களுக்குச் சாதகமாக ஒரு மனிதன் இருக்கவேண்டுமல்லவா? அதற்காக அனுப்பப்பட்டவனே யோசேப்பு. தன்னுடைய பிள்ளைகளைப் 

போஷpப்பதற்காக, தன்னுடைய பிள்ளைகளில் ஒருவனையே எதிரியின் பாளையத்திற்குள் ஊடுருவச்செய்துவிட்டாரே. அவ்வாறே, தன்னுடைய ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து விடுவிக்கும்படியாக, தன்னுடைய பிள்ளையாகிய மோசேயை எகிப்தின் அரண்மனைக்குள்ளேயே அனுப்பிவிட்டாரே. யோசேப்பின் அனுபவம் ஆரம்பத்தில் கடினயிருந்தது, பிற்காலத்திலோ இனிமையாயிருந்தது; மோசேயின் அனுவமோ ஆரம்பத்தில் அரண்மனையில் இனிப்பாயிருந்தது, பிற்காலத்தில் விடுவிக்கும் பணிக்கென அடியெடுத்துவைத்தபோதோ கடினமாயிரு;நதது. ஆகாரத்திற்காக எகிப்திற்கு உள்ளே தன் ஜனங்களை கொண்டுசெல்லும்போது தேவன் யோசேப்பை பயன்படுத்தினார்; அப்படியே, அவர்கள் அங்கே பலுகி பெருகினபோது எகிப்தின் கயிறுகளை அறுத்து அவர்களை விடுதலையாக்கி வெளியே கொண்டுவரும்படியாக தேவன் மோசேயை பயன்படுத்தினார். 

எகிப்திற்கு நாம் ஏன் அனுப்பப்படுகிறோம்? என்ற கேள்விக்கு விடையறிவது பல நேரங்களில் நமக்கு இயலாததாகக் காணப்படக்கூடும். இரட்சிக்கப்பட்டிருக்கிறேன், பரிசுத்தமான வாழ்க்கை வாழ்கிறேன், கர்த்தருக்குப் பிரியமாக நேரத்தை அனுதினமும் செலவிடுகிறேன், அவருடனான உறவை விட்டு விலகாதிருக்கிறேன்; என்றபோதிலும், நான் ஏன் எதிரிகளின் பாளையத்திற்குள்ளும், தேவபயமில்லாதவர்களின் கூட்டத்திற்குள்ளும், அந்நிய தேவர்களை வணங்குபவர்களுக்குள்ளும் வைக்கப்பட்டிருக்கிறேன்? என்று ஒருவேளை நம்மையே நாம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கலாம். என்றபோதிலும், அதின் மூலமாக நிறைவேற்றப்படவிருக்கும் தேவ திட்டத்திற்கு நாம் காத்திருப்போமென்றால், எதிரியின் தேசமே ஒருநாள் நமக்கு கீழ் வருவது உறுதி. எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது (ஆதி 41:44) என்றல்லவா பார்வோன் கூறினான்; இது, எதிரியின் எல்லைக்குள் புகுந்து, அவனது அதிகாரத்தையே அபகரித்த நிகழ்வு அல்லவா. சகோதரர்களால் தள்ளப்பட்டுவிட்டதை நினைக்காமல், தேவனோடு ஒட்டியிருப்பதையே தெரிந்துகொண்டால், எதிரியின் பாளையத்திலும் தேவனுடைய திட்டம் நிறைவேறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக