ஞாயிறு, 10 அக்டோபர், 2021

விருந்தாகும் விருந்தாளி! (ஆதி 19:4,5)

விருந்தாகும் விருந்தாளி!


அவர்கள் படுக்குமுன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு, லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா என்றார்கள். (ஆதி 19:4,5)


'காப்பாற்றவேண்டும் என்ற கரிசனையுடன் நாம் உபசரிக்கின்றவர்களை உலகம் தனக்கு உணவாக்கிக்கொள்ள செய்யும் போராட்டத்தை' நாம் அறிந்துகொள்ளவேண்டும். கூடாரத்திற்குள் வைத்து எத்தனைதான் விருந்தளித்தாலும், கூடாரத்திற்கு வெளியிலோ 'அவர்களையே உண்ணும்படியாக' உலகம் காத்துக்கொண்டிருக்கின்றது என்பது நாம் உணர்ந்துகொள்ளவேண்டியது. தூதர்கள் தங்களைக் காத்துக்கொண்டதுபோல, தங்களைக் காத்துக்கொள்ள பெலனில்லாத மனிதர்கள், கூடாரத்திற்கு உள்ளே விருந்துண்டு, கூடாரத்திற்கு வெளியிலோ விழுந்துகிடப்பார்கள். எனவே, கூடாரத்திற்கும் வெளியே போராடும் வீரர்களாகவே விருந்துண்பவர்களை உருவாக்கினால், விருந்தின் பெலன் வீதியிலே வீணாகாது.  

ஆலயத்தில் இருக்கும்போது, கைகளைத் தட்டி, ஆரவாரித்து ஆராதித்துவிட்டு, ஆலய வாசலை விட்டு வீட்டு வாசலுக்குள் நுழைந்ததும், ஆலயத்தில் உண்ட உணவே அநேகருக்கு மறந்துபோய்விடுகின்றது; அதன் பெலனும் அவர்களுக்குக் கிடைக்காதபடி வீணாகிவிடுகின்றது. வீட்டுக் கேட்டிற்குள் (பயவந) வந்ததும் 'கேட்டின் மகன்' (2தெச.2:3) தரும் விருந்து அநேகரைக் கெடுத்துப்போடுகிறது அல்லது ஆலயத்தில் உண்டவைகளை வாந்தியெடுக்கவைத்துவிடுகின்றது. வாழ்க்கையைக் காப்பாற்றும்படியாகக் கொடுக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கடுத்த உயிர்காக்கும் மருந்துக்களையெல்லாம், கக்கும்படியாக சாத்தான் செய்யும் கிரியைகளில், அறியாமையினாலும், அறிந்தும், துணிகரத்தினாலும் பலர் சாத்தானுக்கு ஆகாரமாகிவிடுகின்றனர். 

லோத்துவின் வீட்டிற்குள் இரண்டு புருஷர்கள் நுழைந்ததைக் கண்டதும், சோதாமின் மனுஷர் விழித்துக்கொண்டார்கள். 'ஆண்புணர்ச்சிக்கு அடிமையாகியிருந்த' (ர்ழஅழளநஒ) சோதோமின் புருஷர்களது அங்கங்களில் பிசாசினால் பசி உண்டானது; சத்தியத்தை அறியாததினால் சரீரங்களில் வந்த சரிவு இது (ரோம. 1:27). இத்தகைய பசியுள்ள சோதோமில் கறைபடாதபடிக்கு லோத்து தன்னைக் காத்துக்கொண்டதும், லோத்துவின் குடும்பத்தை இத்தனை நாட்கள் பத்திரமாகப் பாதுகாத்ததும் கர்த்தரின் செயல் அல்லவோ! நமது பரிசுத்தத்தை நாம் காக்க முயற்சியெடுத்தால்; பாதுகாப்பின் கேடகமாக அவரே நமக்கு முன் நிற்பார் என்பது எத்தனை மேன்மை.  

'லோத்துவின் வீட்டிற்குள் வந்த விருந்தாளிகளையே அறியும்படி வீட்டைச் சூழ்ந்துகொண்ட சோதோமின் வாலிபரும் கிழவரும், முதன் முறையாக சோதோமிற்குள் லோத்து நுழைந்தபோது அவனையும் சூழ்ந்திருந்திருப்பார்களே?' எனவே, எத்தகைய பாதுகாப்பு நீதிமானின் மேல் இருந்திருந்தால், இத்தகைய பாவிகளிடத்திலிருந்து கர்த்தர் லோத்துவைத் தப்புவித்திருப்பார்! லோத்துவினிடத்தில் ஒருவேளை பலமுறை முயற்சித்தும் சோதோமின் மனிதர்கள் தோற்றுப்போயிருப்பார்கள்; அதனால், தாங்கள் எத்தனை அக்கிரமத்திற்குள் கிடந்தாலும், அவனுடைய வீட்டையோ விட்டுவிட்டார்கள். அக்கிரமம் நிறைந்த சோதோமில், 'பரதேசியாயிருந்தாலும், பரிசுத்தமாயிருந்த' லோத்துவைப் போல நாம் இவ்வுலகத்திலே நம்மைக் காத்துக்கொள்ள கடமைப்பட்டவர்கள்.'உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா' என்ற வார்த்தையை சோதோமின் ஜனங்கள் அனைவரும் அல்ல, 'வாலிபர்களும், கிழவர்களும்' சொல்வது 'ஆண்புணர்ச்சிக்கு அடிமையாகிப்போன சோதோமின் ஆண்களையே சுட்டிக்காட்டுகிறது.

ஆடுகளை ஓய்நாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள் (மத் 10:16) என்று இயேசு கிறிஸ்து சீஷர்களுக்கு ஆலோசனை கொடுத்தாரே. 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்' (யோவா 14:6) என்கிறார் இயேசு, 'வழியில் நுழைந்து, வயிறாரச் சத்தியத்தை உண்டுகொண்டுகொண்டிருக்கும் நேரத்தில், வெளியே இழுக்கும் சத்துருவின் சக்திகளுக்கு எச்சரிக்கையாயிருப்போம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக