துணையா? தூக்குமரமா?
அவள் என் சகோதரி என்பது மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள். என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தாரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான். (ஆதி 20:12,13)
கணவனும் மனைவியும் ஒரே சரீரம் என்று வேதம் போதித்தாலும், 'தேவனுக்கு விரோதமான காரியங்களில் ஒன்றாக இணைந்து சென்றால்' பிலேயாமை மறித்து வழியிலே தேவன் நின்றதுபோலவே, கணவனையும் மனைவியையும் மறித்து தேவனே வழியில் நிற்பார். கர்த்தருடைய தூதன் பிலேயாமை நேர்கி: கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்றுதரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் (எண்; 22:33) என்று சொன்னதைப்போலவும், தேவனுடைய மனுஷனை சிங்கம் கொன்றுபோட்டபோது, கழுதை உயிரோடு அங்கே நின்றுகொண்டிருந்ததைப்போலவும் (1இரா. 13:24). காப்பாற்றப்படக்கூடிய சூழ்நிலை சிந்தையில் எதிர்துருவமாயிருக்கிற கணவனது அல்லது மனைவியினது வாழ்க்கையில் உருவாகக்கூடும். ஆபிரகாம் தன் மனைவியை சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பி சாராளை அழைப்பித்தான். எனினும், ஆபிரகாம் மறைத்ததை ஆண்டவர் அபிமெலேக்கிற்கு வெளிப்படுத்தினார். அவள் இன்னொருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார் (ஆதி. 20:2,3). ஆபிரகாமும் சாராளை சகோதரி என்று சொன்னான்; அப்படியே, சாராளும் ஆபிரகாமை சகோதரன் என்றே சொன்னாள். இருவரும் ஒருமனப்பட்டு, அபிமெலேக்கு என்ற மற்றொருவனுக்கு சாவை வருவிக்கவிருந்தார்கள்; கர்;ததரோ, காப்பாற்றினார்.
அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? (அப் 5:1-3) என்றான். ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்களும் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டு போவார்கள் என்றான் (அப் 5:7-9). அனனியாவும் சப்பீராளும் ஒருமனப்பட்டு ஒருவருக்கொருவர் மரணத்தை வருவித்துக்கொண்டார்கள்.
நாபால் முரடனும் துராகிருதனுமாயிருந்தான் (1சாமு 25:3). நாபால் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது, பத்து வாலிபரை நாபாலிடத்திற்கு அனுப்பி, தன் பேரைச் சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து, அவனை வாழ்த்தி, உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான் (1சாமு 25:4-8). ஆனால், நாபாலோ, நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான் (1சாமு 25:10,11). எனினும் நாபாலோடு அவனது மனைவி அந்த காரியத்தில் ஒருமனப்படவில்லை. நாபாலின் மனைவி தாவீதை சந்தித்து, என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பெயர் நாபால். அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை (1சாமு 25:25) என்று சொல்லி இருவரையும் காப்பாற்றினாள். தாவீதின் பட்டயம் தொடாதிருந்தபோதிலும், கர்த்தரின் வாதையினால் செத்தான் நாபால்; அபிகாயிலோ மரணத்திலிருந்து தன்னைக் காத்துக்கொண்டாள். துணையாயிருப்போம், தூக்குமரமாயல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக