புதன், 13 அக்டோபர், 2021

வாடகைத் தாய் (ஆதி 30:1)

 வாடகைத் தாய்



ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக் கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள். (ஆதி 30:1)


கர்த்தரால் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும்போது, மனிதர்களிடத்தில் கடினமாய் நடந்துகொள்வது நியாயமாகாது. ராகேலின் கர்ப்பம் கர்த்தரால் அடைக்கப்பட்டிருந்தது; என்றாலும், விக்கிரகத்தோடு ஒட்டிக்கொண்டிருந்த ராகேல், விரக்தியின் வார்த்தைகளையோ புருஷனிடத்தில் கொட்டுகிறாள். யாக்கோபு ராகேலை அதிகமாய் நேசித்தான்; அப்படியிருக்க, 'எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்' என்ற அவளது வார்த்தைகள் அவனுக்கு எத்தனை துக்கத்தைக் வருவித்திருக்கும். இன்றும், தங்கள் வாழ்க்கையில் அடைபட்டிருக்கும் வாசலினால், பலர் விரக்தியின் நிலைக்குச் சென்றுவிடுகின்றனர், தற்கொலைக்கு நேராகத் தூண்டப்படுகின்றனர், எதிர்ப்படும் எவரோடும் சினங்கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர், வாழ்க்கையையே வெறுப்போடு கழித்துக்கொண்டிருக்கின்றனர். விரும்பினது வாய்க்காதுபோய்விட்டதின் விளைவினையும், விரோதத்தையும் வீட்டிலே பெற்றோரிடத்தில் காட்டிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் உண்டு; அப்படியே, வாழ்க்கையின் தடைகளுக்கு விடைகாணும் பெலனின்றி, தான் பெற்ற பிள்ளைகளே துக்கப்படும்படி நடந்துகொள்ளும் பெற்றோரும் உண்டு. வாழ்க்கையில் எங்கோ ஏற்படும் முட்டுக்கட்டையினை மனதில் வைத்துக்கொண்டு, கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டேயிருக்கும் குடும்பங்களும் உண்டு. 

பிள்ளையில்லாத நிலையில், 'சாகிறேன்' என்றாள் ராகேல். தடைகள் காணப்படும்போது, ஜீவனை அழிவுக்குள் தள்ளிவிடவே சத்துரு முயற்சிக்கிறான். ஆனால், ஆண்டவரோ, தன்னை நம்பியிருப்பவர்களுக்கு, தடைகளை நீக்கிப்போடுகிறவராக முன்னணியில் நடந்துபோகிறார் (மீகா. 2:13). நம்முடைய அடைபட்ட வாசலுக்கு விடை ஆண்டரிடத்திலேயே உண்டு. 

அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான். (ஆதி 30:2) 

கோபங்கொண்டு மனைவியாகிய ராகேல் பேசின வார்த்தைகள் கணவனாகிய யாக்கோபையும் கோபக்காரனாக்கிற்று. எதிர் முனையில் உருவாகும் எதிர்ப்புக்கு, நம்முடைய துருவத்திலேயே தொடக்கம் உருவாகின்றது என்பதை பலவேளைகளில் பலரால் உணர்ந்துகொள்ள இயலுவதில்லை. நம்முடைய கோபத்தின் வார்த்தைகள் மற்றவர்களின் குணத்தையும் மாற்றிவிடப்போதுமானது. இதை அறியாதபடியினாலேயே, அநேக மனிதர்கள் தாங்கள் பிறரிடத்தில் பேசிவிட்ட வார்த்தைகளின் விளைவை பின் நாட்களில் தங்களது வாழ்க்கையில் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். 'எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்' என்று ராகேல் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட யாக்கோபு, 'கொடுப்பது நானல்ல, தேவனே' எனவே, என்மீது கோபப்பட்டு பிரயோஜனம் ஒன்றுமில்லை என்பதை அவளுக்கு உணர்த்துகின்றான். யாக்கோபு ராகேலை அதிகமாக நேசித்தான் என்று வாசிக்கிறோம்; என்றாலும், ராகேல் யாக்கோபை அதற்கு ஈடாக அத்தனையாக நேசித்திருப்பாளா? என்பது கேள்விக்குரியே. அக்காளாக இருந்தாலும், அடுத்தவளுக்குக் கிடை;ததுவிட்டது, தனக்குக் கிடைக்கவில்லை என்ற வருத்தம் ராகேலை நிறைத்திருந்தது ஒருபுறம் இருந்தாலும், கணவனிடம் கோபத்தை கணவனிடத்தில் காட்டும் மனைவி என்ற நிலையில்தான் இருந்தது அவளது வாழ்க்கை. பிள்ளைக்காக மாத்திரம் இப்படிப் பேசியவள், பிற காரியங்களுக்காகவும் யாக்கோபினிடத்தில் இப்படி பேசியிருக்கமாட்டாளோ? குறைவுள்ளவள் என்று யாக்கோபினால் அளக்கப்பட்ட லேயாள் யாக்கோபை அதிகமாக நேசித்திருக்கக் கூடும்; ஆனால், யாக்கோபினால் லேயாளை நேசிக்க இயலவில்லை; அழகானவள் என்று யாக்கோபினால் அளக்கப்பட்ட ராகேல் யாக்கோபை குறைவாகவே நேசித்திருப்பாள்; எனவே, இத்தகைய கோபமான வார்த்தைகள் அவளது வாயிலிருந்து புறப்பட்டுவருகின்றன. இன்றும், அன்பு எங்கிருக்கின்றது என்பதை அடையாளங்கண்டுகொள்ள இயலாமல், அழகிலே மயங்கி அன்பிற்கோ வாழ்க்கையில் ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ள மனிதர்கள் உண்டே. 

தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? (ஆதி 30:2) என்று அவளுக்கு உணர்த்துவிக்கின்றான்; எனினும், தகப்பன் வீட்டிலிருந்து திருடின விக்கிரகத்தைக் மறைத்து வைத்திருந்த ராகேல், தேவனைத் தேடியிருக்கவும், யாக்கோபின் வார்த்தைகள் அவளது உள்ளத்தில் உரைத்திருக்கவும் வாய்ப்பில்லை; எனினும் யாக்கோபின் இந்த வார்த்தைகளோ அவள் உண்மை தேவனை அறிந்துகொள்வதற்கான முதற்படியான அறிவிப்பாயிருந்தது. 

குஷ்டரோகியாயிருந்த சீரிய படைத்தலைவனாகிய நாகமான், சீரிய ராஜாவினிடமிருந்து தான் பெற்ற நிருபத்தை இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ;டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது.இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ;டரோகத்தினின்று நீக்கிவிடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்கச் சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றானே (2 இரா 5:6,7). தேவனிடத்தில் கொண்டுசேர்க்கவேண்டியவைகளை மனிதர்களிடத்தில் கொண்டு கொட்டினால், அல்லது காட்டினால் இப்படிப்பட்ட கோபத்தின் விளைவுகளையே அது வருவிக்கும். எசேக்கியாவைப் போல கர்த்தருக்கு முன் விரித்துவைத்தால் (2 இராஜா. 19:14), இருதயத்தின் கனம் தீரும். 

கர்த்தர் அடைத்திருப்பதைக் கருத்தில் கொள்ளாமல், கர்த்தரால் கதவு திறக்கப்பட காத்திராமல், இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று (ஆதி 30:3) சொன்னாள் ராகேல். ஆபிரகாமின் மனைவியாகிய சாராய் தன் கர்ப்பத்தை கர்த்தரே அடைத்திருக்கிறார் என்பதை அறிந்திருந்தாள்; எனவே, அவள் ஆபிரகாமை நோக்கி, 'நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்' (ஆதி 16:2) என்றாள்; என்றாலும், வீடு கட்டப்படவேண்டும் என்ற விருப்பத்தில் விழுந்துபோனாள்; ராகேலுக்கோ, 'தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்' என்று யாக்கோபு சொல்லவேண்டியதாயிருந்தது; அவளும் வீடு கட்டப்படவேண்டும் என்ற விருப்பத்தில் விழுந்துபோனாள். தேவனை அறிந்தவர்களாயிருந்தாலும், தேவனை அறியாதவர்களாயிருந்தாலும், விருப்பங்கள் மனிதர்களை வீழ்த்திவிடக்கூடும். தேவனை அறிந்திருந்தபோதிலும், விருப்பத்தினால் இயக்கப்பட்டு, தேவனை அறியாதவர்களுக்கு இணையாக நடந்துகொள்ளும் மக்கள் உண்டு. 

யாக்கோபு பில்காளைச் சேர்ந்து ஒரு குமாரனைப் பெற்றெடுத்தபோதோ, 'தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார்' என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள் (ஆதி 30:6); தேவன் அல்ல ராகேல் அல்லவோ தவறான பாதையில் தன் வழக்கைத் தீர்வுகாண முற்பட்டாள். எனவே, வெளிப்படுத்தல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள வரிசையில்கூட தாண் கோத்திரம் சேர்க்கப்படவில்லையே (வெளி. 7:4-8). அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும் (பிர 10:8) என்று எழுதப்பட்டிருப்பதைப்போல, 'தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்' (ஆதி 49:17) என்றல்லவோ தாணைக் குறித்து வேதம் சுட்டிக்காட்டுகின்றது. தன் மீதிருந்த ஆண்டவரது அடைப்பை தன் வேலைக்காரியாகிய பில்காளைக் கொண்டு ராகேல் பிடுங்க முயற்சித்ததால் வந்த விளைவே இது. வேலைக்காரியாகிய ஆகாரைக் கொண்டு சாராள் தனது அடைப்பைப் பிடுங்க நினைத்து, 'துஷ்டமனுஷனாகிய இஸ்மவேலைப்' (ஆதி. 16:12) பெற்றெடுத்தாள்; அவனுடைய எதிர்காலமும், எதிராகக் குடியிருப்பான் என்றே எழுதப்பட்டிருக்கின்றது. அடைப்பை பிடுங்கி ஆண்டவருக்கு விரோதமான சந்ததியை நாம் உருவாக்கிவிடக்கூடாது. 

இந்த நாட்களிலும், 'ஆகார், பில்காள்' போன்ற வேதம் உரைக்கும் வேலைக்காரிகள், 'வாடகைத் தாய்' (ளரசசழபயஉல) என்ற பெயரில் மருத்துவ உலகில் வலம் வருகின்றன. மனைவியின் கருவில் வளரவேண்டியதை மற்றவர்களின் கருவில் வளர்ப்பது சத்தியத்திற்கு எதிரானதே. கருவில் வளரும் பிள்ளைக்கு 'வாடகைத் தாய்' என்றால், கணவனுக்கு 'வாடகை மனைவிதானே' நம்முடைய வீடு கட்டப்படவேண்டும் என்பதற்காக, தேவனுக்கு விரோதமான செயல்களில் ஈடுபது நியாயமாகிவிடானது. மனைவியோடு நின்றால் அது மருத்துவம்; மற்றவளை மனைவியாக்கிவிடாமல் நிறுத்தவும் என்பதே வேதம் போதிக்கும் முறை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக