வழி விலகினதினால் உண்டான வலி
ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான். அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷhனையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள். (ஆதி 25:1,2)
வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்ளும் முன்னரும், வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்ட பின்னரும் வாழ்க்கையைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம். இல்லையெனில், நம்முடைய வாழ்க்கையே நமக்கு எதிரிகளை உருவாக்கிவிடும். தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்று ஆபிரகாம் சொன்னபோது, இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி, அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார் (ஆதி 15:3-5).
புத்திரசந்தானத்திற்காக இத்தனையாய் ஆபிரகாம் அவசரப்பட்டதைப்போலவே, சாராளும் அவசரப்படத் தொடங்கினாள். சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள் (ஆதி 16:3). ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான் (ஆதி 16:15). இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினான் (ஆதி 17:18); என்றபோதிலும், ஆண்டவரோ, உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன் (ஆதி 17:19) என்று சொன்னார். ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறக்கவிருக்கும் ஈசாக்குதான் வாக்குத்தத்தத்தின் மகன் என்பதை ஆண்டவர் உறுதியாக ஆபிரகாமுக்கு அறிவித்திருந்தார்;
வீட்டில் பிறந்த பிள்ளை சுதந்தரவாளி அல்ல என்று ஆண்டவர் எச்சரித்திருந்தபோதிலும், ஆகாரிடத்தில் பிறந்த இஸ்மவேலும் சுதந்தரவாளி அல்ல என்று ஆண்டவர் சுட்டிக்காட்டினபோதிலும், ஆபிரகாம் கேத்தூராள் என்னும் மற்றுமொரு பெண்ணை விவாகம் செய்துகொண்டான். கேத்தூராளினிடத்தில் பிறக்கும் பிள்ளைகள் ஆண்டவர் அனுமதித்த சந்ததியாக இருக்காது என்பதை ஆபிரகாம் நன்கு அறிந்திருந்தபோதிலும், அவளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றெடுத்தான். நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை (ஆதி 24:3,4) என்று தனது ஊழியக்காரனிடத்தில் உறுதி வாங்கிக்கொண்ட ஆபிரகாம் தன் வாழ்க்கையிலோ அதனைக் கடைப்பிடிக்கத் தவறிப்போனான். கேத்தூராள் ஓர் கானானிய பெண்ணே.
இஸ்மவேலைக் குறித்து, அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார் (ஆதி 16:12). ஆகாரிடத்தில் பெற்ற ஒரு குழந்தை வாக்குத்தத்தத்திற்கு வம்சத்திற்கு எதிரானதாகிவிட்டது. இதனை உணர்ந்தபோதிலும், மேலும் கேத்தூராளினிடத்தில் ஆபிரகாம் பிள்ளைகளைப் பெற்றெடுத்தது, வாக்குத்தத்தத்தின் வம்சத்தி;ற்கு எதிரான தொகையினைப் பெருக்குவதாகவே அமைந்தது. ஒருபுறம் வாக்குத்தத்தத்தின் பிள்ளையையும், மறுபுறம் எதிரிகளையும் நாம் உருவாக்கிவிடக்கூடாது. உத்தமனாகிய யோபுவின் எருதுகளையும் கழுதைகளையும் சரித்துக்கொண்டுபோன சபேயர் கேத்தூராளின் வம்சமே. (யோபு 1:14,15)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக