புதன், 13 அக்டோபர், 2021

முதலிடம் எதற்கு? (ஆதி 30:35,36)

முதலிடம் எதற்கு?



அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து, தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணத்தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான். (ஆதி 30:35,36)


ஆசீர்வாதத்திற்காக மாத்திரமே ஆண்டவரைப் பின்தொடரும் மக்கள் இன்றைய நாட்களில் அநேகர் (யோவான் 6:26). ஆசீர்வாதங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டு, கிறிஸ்துவையோ தங்கள் வாழ்க்கைக்குத் தூரமாக வைத்துக்கொள்ளவே இன்னமும் பலர் விரும்புகின்றனர். வியாதிகள், தேவைகள், பிரச்சனைகள் மாத்திரம் தீர்ந்துவிட்டால் போதும் என நினைக்கும் மக்கள், நிரந்தரமாக கிறிஸ்துவுக்கு தங்களை அர்ப்பணிப்பதில்லை. சுகம் பெறும் வரை மாத்திரமே கிறிஸ்துவைச் சுற்றிவருகின்றனர்; பெற்றதும் கிறிஸ்துவை விட்டுத் தூரமாகப் பயணித்துவிடுகின்றனர். சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? (லூக் 17:17) என்ற இயேசுவின் வார்த்தைகள், அவரது எதிர்பார்ப்பினையல்லவோ பிரதிபலிக்கிறது. ஊழியர்கள் பலரும்கூட, சரீரத்திற்குரிய ஆசீர்வாதங்களை மட்டுமே காட்டி, ஆத்துமா அறுபட்டுவிடாமல் (எரே. 8:22), குறுக்குவழியில் ஜனங்களை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ளவே விரும்புகின்றனர். பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3 யோவா 1:2) என்ற வேதத்தின் சூத்திரத்தில் 'ஆத்துமாவுக்கே முதலிடம்' என்பதை மறந்துவிட்டவர்கள் அநேகர்.

லாபானுயை வீட்டை நோக்கி யாக்கோபு வந்தபோது, லாபான் அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோனான்; அதுமாத்திரமல்ல, நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான் (ஆதி 29:13,14). யாக்கோபின் நிமித்தம் கர்த்தர் தன்னை ஆசீர்வதித்ததை குறிப்பினால் (டில நஒpநசநைnஉந) அறிந்துகொண்ட லாபான், தான் பெறுவதிலிருந்து சம்பளமாக யாக்கோபுக்குக் கொஞ்சத்தை கொடுக்க ஆயத்தமானான்; 

(ஆதி 29:15). உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன். என்று யாக்கோபு சொன்னபோது, 'என்னிடத்தில் தரித்திரு' (ஆதி 29:18,19) என்றான், எனினும், ராகேலுக்குப் பதிலாக லேயாளையே கொடுத்தான்; யாக்கோபின் மூலமாக ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தாலும், யாக்கோபு விரும்பிக் கேட்டதைக் கொடுக்க லாபானுக்கோ மனதில்லை. ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்று கேட்டபோது, ராகேலுக்காக மீண்டும் 'என்னிடத்தில் வேலைசெய்' என்றே பதிலளித்தான். (ஆதி. 25,27)

இன்றும் இப்படிப்பட்ட மக்கள் உலகத்தில் உண்டு, தாங்கள் விரும்பினவைகளை தேவனிடத்திலிருந்து தேவ ஊழியர்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளத் துடிப்பார்கள்; ஆனால், விரும்பினது வீட்டை வந்தடைந்ததும், லாபான் லேயாளைக் கொடுத்து ஏமாற்றியதைப் போலவும், வெறுங்கையாய் யாக்கோபை அனுப்பிவிட நினைத்தது போலவுமே (ஆதி. 31:42) தேவனை அனுப்பிவிட நினைப்பார்கள். எதை எதையோ கொடுத்து அவரை ஏமாற்றாமல், அவர் விரும்பும் ஆத்துமாவைக் கொடுத்துவிட்டால், கூடவே இருந்து நம்மை அவர் ஆசீர்வதிப்பார்; இதுவே சத்தியம்.  

நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும் (ஆதி 30:25,26) என்றும், இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது (ஆதி 30:30) என்றும், அப்படிப்பட்டவைகள் இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும் (ஆதி 30:32) என்றும் சொன்னபோதோ, தன்னுடையவைகளைப் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து, தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணத்தூரத்தில் இருக்கும்படி வைத்தான். (ஆதி 30:35,36). 

தான் ஆசீர்வதிக்கப்படும்போது, தன்னோடு கூடவே யாக்கோபை வைத்திருந்தான் லாபான். ஆனால், 'என் குடும்பத்திற்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்போது' 'இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்' என்று யாக்கோபு சொன்னபோதோ, தன்னைவிட்டு மூன்றுநாள் பிரயாண தூரத்தில் யாக்கோபை வைத்துவிட்டான். சுயலாபத்திற்காக மாத்திரமே தேவனை பயன்படுத்திக்கொண்டு, தன்னுடைய தேவையை தேவன் முன்வைக்கும்போது, அவரை தூரத்தில் வைத்துவிடும் மக்கள் இன்றும் உண்டே. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக