வாசல் இங்கே வீடு எங்கே?
யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். (ஆதி 28:16,17)
வானத்தின் வாசல் ஓரிடத்தில் திறந்திருக்க, தேவனுடைய வீட்டின் 'நிலையாக' அதனைக் கருதாது, நம்முடைய வீட்டைக் கட்டுவதற்காக வேறொரு இடத்தினை நோக்கி நாம் பயணிப்போமென்றால், பல சவால்களைச் சந்திக்கவேண்டிய நிலைக்குள் நாம் தள்ளப்படுவது நிச்சயம்.
சூரியன் அஸ்தமித்தபோது, அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து அங்கே நித்திரைசெய்யும்படி படுத்துக்கொண்டான் யாக்கோபு (ஆதி. 28:11). யாக்கோபு படுத்து நித்திரை செய்துகொண்டிருந்தபோது கண்ட சொப்பனத்தில், 'இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூ தர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்' (ஆதி 28:12); யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். மேலும், அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான் (ஆதி. 28:16,17). இந்த சொப்பனத்தை யாக்கோபு கண்டவுடன், அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான் (ஆதி 28:18,19). என்றாலும், தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லியே பொருத்தனை பண்ணினான் (ஆதி 28:20-22). முதலாவதாக தலையின் கீழ் ஒரு கல்லை எடுத்துவைத்து நித்திரைசெய்தான் யாக்கோபு; பின்னர். அதே கல்லை தூணாக படுத்திருந்த இடத்திலே நிறுத்தினான்; ஆனால், தூணாக நிறுத்தப்பட்ட கல், தேவனுடைய வீடாக மாறுவதற்கோ பல நிபந்தனைகளை யாக்கோபு விதிக்கின்றான். தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனை பண்ணிக்கொண்டான் யாக்கோபு. (ஆதி 28:20-22)
இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான். உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (ஆகா 1:4-7). அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (ஆகா 1:9). முதலாவது நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். (ஆகா 1:8)
இன்றைய நாளிலும், அநேகருடைய நிலை இதுவே. அஸ்திபாரம் எங்கேயிருக்கிறது என்று காட்டப்பட்டபின்னும், வீட்டையோ வேறிடத்தில் கட்ட முற்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக