ஞாயிறு, 10 அக்டோபர், 2021

தலைக்கு மட்டுமல்ல தலைமுறைக்கு (ஆதி 17:9)

 தலைக்கு மட்டுமல்ல தலைமுறைக்கு


பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள். (ஆதி 17:9)


ஆண்டவருடன் தொடங்கிய உறவும், அழைப்பினால் உருவாக்கப்பட்ட உடன்படிக்கையும், நம்முடைய வாழ்நாட்களோடு மாத்திரமே முடிந்துபோவதில்லை. நம்முடைய சந்ததிகளின் வாழ்க்கையிலிருந்தும் உடன்படிக்கை அறுந்துவிடாமலும், அழைக்கப்பட்டவனுடைய ஆயுள் வரை மாத்திரமல்ல, இயேசு கிறிஸ்துவின் வருகை வரையிலும் தொடரவிருக்கும் நம்முடைய சந்ததியின் ஆயுசு உடனும் தலைமுறை தலைமுறையாகத் உடன்படிக்கை தொடரவேண்டும் என்று தேவன் விரும்புகின்றார். 

'நாங்கள்தான் மிஷனரிகளாக, போதகர்களாக, ஊழியர்களாக அழைக்கப்பட்டோம்; பிள்ளைகள் அவர்களாகத்தான் தீர்மானிக்கவேண்டும், தங்களை அர்ப்பணிக்கவேண்டும்' என்று கானானுக்கு எதிரான திசையினை காட்டமுடியாது. எகிப்திலே அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, 'அடிமைகளாயிருந்த இஸ்ரவேலருக்குப் பிறந்த பிள்ளைகளும் அடிமைகளாகத்தானே பிறந்தனர்.' இதைப்போலவே, அழைக்கப்பட்டவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் அழைப்பினைத் தொடரவேண்டியவர்களே. நாம் விலைக்கு வாங்கின ஆட்டின் குட்டியை வீதியில் விட்டுவிடுவோமோ? இதற்கு இடறல் உண்டாக்கினால், அழைக்கப்பட்டவனின் இலக்கை சந்ததி அடையாது.

'விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும், மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினதுபோல (யாத் 31:5), வௌ;வேறு பணிகளில் பிள்ளைகள் திறமை பெற்றிருக்கலாம்; என்றாலும் அத்தனையும் ஆண்டவருக்காகவே உபயோகப்படுத்தவேண்டும் என்பதனை அழைக்கப்பட்டவர்களின் சந்ததி அசட்டைபண்ணிவிடக்கூடாது. விருப்பத்திற்கு இணங்க வித்தியாசமான கல்வியினைக் கற்றாலும், பரத்திற்காகவே அவைகள் உபயோகப்படுத்தப்படவேண்டும்.  

ஆசாரிய ஊழியத்திற்காக ஆரோன் பிரித்தெடுக்கப்பட்டபோது, கர்த்தர் மோசேயை நோக்கி, 'உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக (யாத் 28:1) என்றே கூறுகின்றார். 'ஆத்துமாக்களைச் சம்பாதிக்க அழைக்கப்பட்டவர்கள்; ஆத்துமாக்களுக்குப் பதிலாக ஆஸ்திகளைச் சம்பாதித்து ஆண்டவருக்குக் கொடுப்பதில் ஆண்டவர் ஒருபோதும் பிரியப்படுகிறவரல்ல.' அப்படிச் செய்தால், அது ஆரோனின் குமாரர்கள் கொண்டுவந்த அந்நிய அக்கினியைப் போலத்தான் காண்படும். 

கர்த்தர் தாவீதை நோக்கி, உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். அவன் என் நாமத்துக்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்ய பாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன் (2சாமு 7:12,13) என்று சொன்னாரே. மேலும், கர்த்தர் என்னைக்குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை (1இரா 2:3) தாவீது சந்ததிக்கு நினைப்பூட்டுகின்றானே. ஆகையால் வேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம் (உபா 10:9). அழைப்பு பெற்றவனை பிழைப்புக்கு நேராகத் திருப்புவது பிசாசின் தந்திரமே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக