உடன்படிக்கை
அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார். ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவுசெய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான். (ஆதி 21:22,23)
'தேவமனிதர்களிடமிருந்தே தேசத்திற்கு தயவு தேவை' என்பதையே ஆபிரகாமுக்கும் அபிமெலேக்கிற்கும் இடையிலான உரையாடல் உணர்த்துகின்றது. ஆபிரகாம் கேராரிலே தங்கியிருந்த நாட்களில், அவன் செய்கிற காரியங்கள் எல்லாவற்றையம் உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த அபிமெலேக்கு, ஆபிரகாமோடு கூட தேவன் இருப்பதை அறிந்துகொண்டான் (ஆதி. 21:22). மேலும், அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங் 1:3) என்ற வசனத்திற்கு ஒத்ததாக இருந்த ஆபிரகாமின் வாழ்க்கையை கண்ட அபிமெலேக்கு, அவனோடு உடன்படிக்கை செய்துகொள்ளவிரும்பினான்.
'தேவமனிதர்களோடு தேசம் உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டும்' என்பதையே அபிமெலேக்கின் விருப்பம் வெளிப்படுத்துகின்றது. நிகழ்காலத்தில் மாத்திரமல்ல, எதிர்காலத்தில் எழும்பப்போகிற சந்ததிக்கும் தேவமனிதனின் தயவு தேவை என்பதையே 'எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது' என்ற அபிமெலேக்கின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. 'நயோ, உன் குமாரனோ, உன் பேரனேரீ' என்று சொல்லாமல், 'நீ' என்று ஆபிரகாமை மாத்திரம் சுட்டிக்காட்டும் அபிமெலேக்கு, 'எனக்காவது, 'குமாரனுக்காவது, பேரனுக்காவது' என்று மூன்று தலைமுறைகளைச் சுட்டிக்காட்டுவது, 'தேவமனிதர்களிடத்தில் தலைமுறைகளுக்கும் தயவு தேவை' என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.
நம்முடைய வாழ்க்கையை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும் பிற மனிதர்கள் தேவன் நம்முமோடு கூட இருப்பதை அறிந்துகொள்ள முடியுமா? தேவ மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பல மனிதர்கள், தேசத்தோடு உடன்படிக்கை செய்துகொள்ள வாஞ்சிக்கிறார்கள், தேசம் தங்களைத் தேடிவந்து உடன்படிக்கை செய்துகொள்ளும் அளவிற்கு உயர்ந்த நிலையில் தாங்கள் தேவனால் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையோ அவர்கள் உணராதிருக்கிறார்கள். தேவனை அறியாத அல்லது அந்நிய தெய்வங்களை வணங்கிக்கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளுக்காக தேவன் கொடுத்த ஸ்தானத்தை விட்டு கீழே இறங்கிச் செல்லும் மனிதர்களும், தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கும் உயர்ந்த ஸ்தானத்தின் அருகே அவர்களை அமரவைப்பதும், 'அவர்கள் நம்மோடு உடன்படிக்கை செய்துகொண்டதையல்ல, நாம் அவர்களோடு உடன்படிக்கை செய்து அவர்களுடைய செயல்களுக்கு உடன்பட்டுவிட்டதையே சுட்டிக்காட்டுகின்றது.' 'தேவன் உடனிருந்தால், ஜனங்கள் தேடிவருவார்கள்.' (ஏசா 60:3) என்பதல்லவோ தீர்க்கதரிசனம்.
'உடன்படிக்கை செய்துகொள்வதற்கு முன் உள்ளத்தை சுத்தம் செய்துகொள்வது' ஆபிரகாமினிடத்தில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். அபிமெலேக்கு ஆபிரகாமுக்குச் சாதகமாக இருந்தாலும், அபிமெலேக்கின் வேலைக்காரர்களில் சிலர் ஆபிரகாமுக்கு விரோதமாகக் காணப்பட்டனர்; ஆபிரகாமின் துரவை கைவசப்படுத்திக்கொண்டனர். எனினும், ஆபிரகாம் உடனே அதனை அபிமெலேக்கினிடத்தில் சொல்லிவிடவில்லை. 'தேசத்தின் எஜமானாகிய அபிமெலேக்கு தன் பக்கம் இருக்க, வேலைக்காரர்கள் சிலர் தரும் சிற்சில உபத்திரவங்களை ஒரு பொருட்டாக ஆபிரகாம் எண்ணவில்லை.' எனினும், உடன்படிக்கை என்று வந்தபோதோ அதனைச் சொல்லாமலும் ஆபிரகாம் இருந்துவிடவில்லை. 'உலகத்தின் மனிதர்கள் தரும் உபத்திரவங்களை சகித்துக்கொள்ள நாம் அழைக்கப்பட்டவர்கள்; ஏnனில், எஜமான் நம் பக்கத்திலேயே இருக்கிறார். எனினும், அவர்கள் தேவன் நம்மிடத்திலிருப்பதை அறிந்து, நம்மோடு உடன்படிக்கை செய்துகொள்ள வரும்போதோ, அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டி உணர்த்துவிக்கும் பொறுப்பு நமக்குண்டு.
மேலும், தான் தோண்டின துரவிற்காக ஏழு பெண்ணாட்டுக் குட்டிகளை சாட்சியாக நிறுத்தினான் ஆபிரகாம் (ஆதி. 21:28-31). நமக்கு ஜீவதண்ணீர் கிடைப்பதற்காக, ஆட்டுக்குட்டியானவர் சிலுவையில் அடிக்கப்பட்டு, பிதாவோடு நம்மை இணைக்கும் உடன்படிக்கையின் அடையாளமானாரே; இந்த உடன்படிக்கை உன்னதமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக