ஞாயிறு, 10 அக்டோபர், 2021

பிழையும், விலையும்? (ஆதி 17:18)

 பிழையும், விலையும்?


இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினான். (ஆதி 17:18)

இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்ளூ நான் அவனை ஆசீhவதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்ளூ அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.(ஆதி 17:20)


கர்ப்பவதியாக ஆகார் ஆபிரகாமின் வீட்டைவிட்டு ஓடிப்போகிறபோது, 'கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்ளூ கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. அவன் துஷ;டமனுஷனாயிருப்பான்ளூ அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்ளூ தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான்' (ஆதி. 16:11,12) என்றார். ஆகார் ஆபிராமுக்கு (துஷ்டமனுஷனான) இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான் 

(ஆதி. 16:16). ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது (ஆதி. 17:1), (துஷ்டமனுஷனாகப் பிறந்திருக்கும்) இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்றுதான் விண்ணப்பம்பண்ணினான் (ஆதி. 17:18)ளூ ஆண்டவர் பிழையாகப் பார்த்துக்கொண்டிருக்கும் இஸ்மவேலை, ஆபிரகாமோ இன்னமும் வாக்குத்தத்தத்திற்கடுத்த பிள்ளையாகவே பார்த்துக்கொண்டிருந்தான். துஷ்டமனுஷனான இஸ்மவேல், ஆபிராமின் வீட்டில் 13 வருடங்கள் வளர்ந்தான்.  பிள்ளை வேண்டும் என்ற நிலைக்கே முக்கியத்துவம் கொடுத்து, பிதாவின்  காலத்திற்குக் காத்திராமல், தன்னுடைய சரீர பெலத்தினால் பிழையாக இஸ்மவேலைப் பெற்றெடுத்துவிட்டான் ஆபிராம்ளூ ஆனால், இப்போதோ, தனக்கும் சாராளுக்கும் பிறக்கவிருக்கும் கர்த்தருடனான உடன்படிக்கையின் சந்ததிக்கு களையாகவே அவன் வளரப்போகிறான் என்று அறிந்தும் இஸ்மவேலுக்காகவே தொடர்ந்து விண்ணப்பம் செய்கிறான் ஆபிராம். ஆகாரிடத்தில் சேர்ந்ததால், சரீரத்திலும் விருத்தசேதனத்தின் வலி அப்படியே, சந்ததிக்கும் துஷ்டமனிதர்களால் வலியினை உண்டாக்கிவிட்டான் ஆபிராம். 

விருப்பமில்லாமல் பிலேயாமை அனுப்பிவிட்டு, வழிமறித்து நின்றதைப் போன்ற நிலைதான் (எண். 22:12,20,23) ஆபிரகாமின் வாழ்க்கையிலும் உண்டாகின்றது. இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்ளூ நான் அவனை ஆசீhவதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்ளூ அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் (ஆதி 17:20) என்றார் ஆண்டவர்ளூ என்றாலும், 'துஷ;டமனிதனான இஸ்மவேலோடு ஆண்டவர் உடன்படிக்கையினை ஏற்படுத்தவில்லை'. மாறாக, வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் (ஆதி 17:21) என்றே சொல்கிறார் ஆண்டவர். அநேக நேரங்களில், ஆபிரகாமைப் போல நாமும் தவறான காரியங்களைச் செய்துவிட்டு, அவைகளிலிருந்து திருந்தி வாழ்வதற்குப் பதிலாக, பிழைகளைப் பாதுகாக்கவே விண்ணப்பம் செய்துகொண்டிருக்கின்றோம். பிழைகள் பெருகினால், அது, பிதாவின் சந்ததியை எதிர்த்தே நிற்கும். பிழைகளுக்காக ஜெபித்துக்கொண்டேயிருப்போ மென்றால், விலைக்கிரயம் செலுத்தித்தான் ஆகவேண்டும். யோவானின் பிறப்பின்போது, தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டதுளூ உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான் (லூக் 1:13-15) என்ற கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும் சந்ததி பெருக ஜெபிப்போம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக